Tuti Post
செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடிக்கு வந்த மரத்தடி கண்டெய்னரில் 350 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல் -வருவாய் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை

இலங்கையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு நேற்று மாலை வந்த கண்டெய்னரில் சுமார் 350 கிலோ கோக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மதிப்பு சுமார் 1200 கோடியாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு, இலங்கையில் இருந்து  நேற்று மாலை 7 மணியளவில் வந்த கண்டெய்னர் கப்பலில், சில கண்டெய்னர் பெட்டிகளில், போதைப் பொருளான கோக்கைன் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து களத்தில் இறங்கிய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள DBGT கண்டெய்னர் இறக்குமதி முனையத்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கோட்டையை சேர்ந்த ஜெயசக்தி டிரேடர்ஸ் என்ற நிறுவனத்திற்க்கு வந்த 6 மரத்தடி கண்டெய்னர்களை சோதனையிட்டதில் அதில் ஒரு கண்டெய்னரில் மரத்தடிகளுக்கு இடையே மறைத்து வைத்திருந்த சுமார் 350 கிலோ எடையிலான கோக்கைன் போதைப் பொருள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், வழக்கமாக ஜெயசக்தி டிரேடர்ஸ் நிறுவனத்திற்க்கு இறக்குமதி செய்து தரும் சுங்க முகவர்களிடம் முதல் கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

மிகப் பெரிய அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ள இந்த சம்பவம் தூத்துக்குடி துறைமுக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அரசியலை விட்டு விலகுகிறேன்.. “அம்மா”வின் ஆட்சி தொடர பாடுபடுங்கள்.. சசிகலா திடீர் அறிவிப்பு

Editor

திருச்செந்தூர் கோயிலுக்கு நிரந்தர இணை ஆணையரை நியமிக்க இந்து முன்னணி கோரிக்கை

Editor

மீண்டும் முழு ஊரடங்கு? மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை

Editor

Leave a Comment