கிருஸ்தவர்களின் தவக்கால நிகழ்வுகளின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் தூத்துக்குடியில் உள்ள தாளமுத்து நகர் கிருஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தக் கொண்டாட்டத்தில், குருத்தோலை பிடித்தபடி கிறிஸ்தவர்கள் ஓசானா பாடல்கள் பாடிக்கொண்டு ஜெபித்தவாறே ஊர்வலமாக செல்வார்கள். பின்னர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். குருத்தோலை ஞாயிறு அல்லது, பாடுகளின் ஞாயிறு என்றழைக்கப்படும் இஞ்ஞாயிறையடுத்து வரும் வாரத்தை, புனித வாரம் என்று கிருஸ்தவர்கள் சிறப்பிக்கின்றனர்.
அது போல் இந்த ஆண்டும் தாளமுத்துநகா் பங்கு ஆலயத்தில் பங்குதந்தை அருட்திரு நெல்சன்ராஜ் தலைமையில் இராஜபாளையம் ஆலயத்திலிருந்து குருத்தோலை பவணியாக தாளமுத்துநகா் மடுஜெபமாலை ஆலயத்திற்கு வந்து திருப்பலியை நிறைவேற்றினாா்கள்.

இதில் திரளான மக்கள் கலந்துகொண்டனா். இதே போல் தாளமுத்துநகா் பங்கிற்குட்பட்ட ஆரோக்கியபுரத்தில் தாளமுத்து நகா் உதவி பங்கு தந்தை அருட்திரு ஸ்டீபன் மாியதாஸ் தலைமையில் மிக்கேல் அதிதூதா் கெபியிலிருந்து பவனியாக வந்து புனித ஆரோக்கியநாதா் திருப்பலியை நிறைவேற்றினாா்கள். இந்த நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டனா்