Tuti Post
ஆன்மிகம் செய்திகள் தமிழ்நாடு

கொரோனா தொற்று எதிரொலி: கோயில்களில் பிரசாதம், தீர்த்தம் வழங்குவதை தவிர்க்க வேண்டும்..! – இந்து சமயஅறநிலையத்துறை சுற்றறிக்கை

இது குறித்து அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத்துறை கமிஷனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கோயிலுக்கு பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். கோயில் வளாகத்தில் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் கோயிலுக்கு வருவதை பாதுகாப்பு கருதி தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.

கோயிலுக்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே வரிசையில் பக்தர்கள் அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் கோயிலுக்கு தேங்காய் பழம், பூ போன்றவற்றை கொண்டு வந்து அர்ச்சனை செய்வதை தவிரக்கலாம். அதேபோல், பிரசாதம் மற்றும் தீர்த்தம் வினியோகத்தையும் தவிர்க்க வேண்டும். பங்குனி திருவிழா நடந்து வரும் கோயில்களில் அப்பகுதிகளில் உள்ள கலெக்டர், எஸ்பி, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோயில் அதிகாரிகள் எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை.!

Editor

நீட் விலக்கு மசோதா – அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணித்த அதிமுக, பாஜக.! -விரைவில் கூடுகிறது சட்டமன்ற சிறப்பு கூட்டம் !

Editor

“வேலுமணி மீது பல கோடி ஊழல் புகார் காரணமாகவே லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை”, – அமைச்சர் கீதாஜீவன்.!

Editor

Leave a Comment