Tuti Post
செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

பதவி உயர்வு பெற்ற 14 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமனம்

தூத்துக்குடி மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்று பயிற்சி முடித்த 14 உதவி ஆய்வாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணி நியமனம் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்தார்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பயிற்சி உதவி ஆய்வாளர்களாக பணியாற்றி, பயிற்சி முடித்த உதவி ஆய்வாளாகள் ராமலிங்கம் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கும், ஆதிலிங்கம் கொப்பம்பட்டி காவல் நிலையத்திற்கும், காந்தி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கம், முத்துக்கிருஷ்ணன் மற்றும் இசக்கியப்பன் ஆகிய இருவரும் தூத்துக்குடி மத்தியபாகத்திற்கும், ரவீந்திரன் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும்,

சுகுமார் நாலாட்டின்புதூர் காவல் நிலையத்திற்கும், சண்முகசுந்தரம் மற்றும் பிரம்மராஜ் ஆகிய இருவரும் ஏரல் காவல் நிலையத்திற்கும், வெள்ளத்துரை புளியம்பட்டி காவல் நிலையத்திற்கும், சுப்பிரமணியன் நாசரேத் காவல் நிலையத்திற்கும், பாலையா முறப்பநாடு காவல் நிலையத்திற்கும், கண்ணன் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கும், சூசைப்பாண்டி மணியாச்சி காவல் நிலையத்திற்கும் ஆகிய 14 உதவி ஆய்வாளர்களை பணி நியமனம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கலந்தாய்வின்போதும் நியமனத்தின் போதும் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல்துறை அலுவலக கண்காணிப்பாளர் மாரியப்பன், உதவியாளர் சதீஷ் கண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

திரிபுரா மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் மீது பாஜகவினர் தாக்குதல் – நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Editor

நெல்லை அருகே ஆற்றில் மூழ்கி 17 வயது சிறுவன் பலி

Editor

குடியிருக்கும் மக்களிடம் 1.5 லட்சம் கேட்கும் அதிமுக அரசாணை ரத்து! – CPIM தொடர் போராட்டம் வெற்றி!

Editor

Leave a Comment