Tuti Post
வர்த்தகம்

அடல் பென்ஷன் யோஜனா கணக்கு தொடக்கம் – தனியார் துறை வங்கிகளிலேயே TMB வங்கி முதலிடம்!!

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி, அடல் பென்ஷன் யோஜனா கணக்கு தொடங்குவதில் தனியார் துறை வங்கிகளிலேயே முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

இது குறித்து வங்கியின் பொது மேலாளர் சூரியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிதாவது:

அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana)வை இந்திய அரசு 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. தனியார் மற்றும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பென்ஷன் வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இத்திட்டத்தின் மூலம் அரசாங்க உத்தரவாத ஓய்வூதியமாக ரூ.1000/ – முதல் அதிகபட்சம் ரூ.5,000 / – வரை வழங்கப்படுகிறது. இந்த நல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அரசு அணைத்து பொது துறை மற்றும் தனியார் வங்கிகளின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

நடப்பு நிதி ஆண்டில் PFRDA அணைத்து வங்கிகளின் MD / EDக்காக 02.11.2020 முதல் 12.12.2020 வரை ஒரு சிறப்பு முகாமை (Makers of Excellence 4.0) நடத்தியது. அதில் அரசாங்கம் நிர்ணயித்த 2500 APY இலக்கை விட கூடுதலாக 371.60% மடங்கு வளர்ச்சியை அளித்து 9290 APY கணக்குகளை பிடித்து

அணைத்து தனியார் துறை வங்கிகளுக்குக்கிடையே முதலிடம் பெற்றது. இதன் மூலம் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி அரசின் அணைத்து நல திட்டங்களிலும் முழு உத்வேகத்துடன் பங்கேற்று மக்களுக்கு அளவற்ற சேவையை செய்து வருகிறது என்று வங்கியின் பொது மேலாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts

தூத்துக்குடி துறைமுகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்

Editor

கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி யிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை.!

Editor

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஏர்போட் அட்வைசரி கூட்டம் – கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.!

Editor

Leave a Comment