சென்னையில் இருந்து தென்கிழக்கே 420கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இன்று அதிகாலை நிலவரப்படி கிழக்கு -தென் கிழக்கிலிருந்து நாகப்பட்டினத்திலிருந்து 310 கிலோ மீட்டர் தொலைவிலும், கிழக்கு தென்கிழக்கு புதுச்சேரியிலிருந்து 360 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடல் பகுதியை இன்று வந்தடையும். மேலும் வடக்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிகளை 36 மணி நேரத்தில் வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.