Tuti Post
கல்வி செய்திகள் தூத்துக்குடி மாவட்டம் வீடியோ

கயத்தாரில் சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டவர் கைது.!*

கோவில்பட்டி அருகே கயத்தாரில் சமூக வலைதளத்தில் பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதாக கயத்தாறு போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் வளைவு ரோட்டை சேர்ந்தவர் குருசாமி மகன் வெங்கடேஷ்குமார் பாபு (36) கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் தலைவர்கள் பற்றிய நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். அதுகுறித்து சமூகவலை தளத்தில் பொது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் வகையிலும்,

தலைவர்களை அவமதிக்கும் வகையிலும், சமூகத்திற்க்கு எதிராக கலகத்தை துண்டும் வகையில் வாசகங்கள் பதிவிட்டு வெளியிட்டதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக திமுக நகர செயலாளர் சுரேஷ்கண்ணன் கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.

கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து வழக்குபதிவு செய்து வெங்கடேஷ்குமார் பாபுவை கைது செய்து கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

Related posts

தூத்துக்குடியில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு.!

Editor

தூத்துக்குடியில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 13 காவல்துறையினருக்கு எஸ் பி ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு.!

Editor

சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை
சோதனை.!

Editor

Leave a Comment