Tuti Post
இந்தியா சினிமா செய்திகள்

பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்- பிரதமர் மோடி இரங்கல்

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 92. அவரின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி -8ம் தேதி, பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92) லேசான கொரோனா அறிகுறிகளுடன், தெற்கு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை (Covid 19) தொடர்ந்து அவரை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதித்தனர்.

அப்போது அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக ஐசியூ வார்டில் வைத்து பராமரிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு வெண்டிலேட்டர் வசதி பொருத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து 20 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவரின் உடல்நலம் தேறியது. ஆனால், நேற்று அவரின் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக உள்ளது என ப்ரீச் கேண்டி மருத்துவமனை (Covid 19) நிர்வாகம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவை லதாவின் சகோதரி உஷா மங்கேஷ்கர் உறுதி செய்தார். பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்..

சகோதரி லதாவின் பாடல்கள் பல உணர்வுகளை வெளிப்படுத்தியவை; பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை அவர் நெருக்கமாகக் கண்டார். லதா மங்கேஷ்கர் உடனான உரையாடல்கள் மறக்க முடியாதவை; அவரது குடும்பத்தினரிடம் எனது இரங்கலை தெரிவித்துள்ளேன், என தெரிவித்துள்ளார்.

லதா மங்கேஷ்கர் இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார்.

இந்திய சினிமாவின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவராகத் திகழ்ந்த லதா மங்கேஷ்கர், கடந்த 1942 ஆம் ஆண்டில் தனது 13-வது வயதில் இசை வாழ்க்கையைத் தொடங்கியவர். இந்தியாவின் பல்வேறு மொழிகளில் 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுமிருக்கிறார். பத்ம பூஷன், பத்ம விபூஷண் மற்றும் தாதா சாஹேப் பால்கே விருது மற்றும் பல கவுரவங்களை லதா மங்கேஷ்கர் பெற்றுள்ளார்.

Related posts

பெங்களூரில் மோசமான வானிலை – தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பிய 2 விமானங்கள்

Editor

தொடர் மழை, தாமிரபரணியில் வெள்ளம்: பாலங்கள் நீரில் மூழ்கின – ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல், வாழைப்பயிர்கள் சேதம்

Editor

ஆட்சியைப் பிடிக்கிறது திமுக கூட்டணி – ஜூ.வி கருத்து கணிப்பு

Editor

Leave a Comment