Tuti Post
அரசியல் இந்தியா உலகம் கல்வி செய்திகள் தமிழ்நாடு தொழில் நாட்டு நடப்பு மகளிர் வர்த்தகம்

2022 – 2023-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நமது பொருளாதாரம் மீழ்வது பொருளாதார வளர்ச்சியில் தெரிகிறது

இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருக்கும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன்.

உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஆத்ம நிபார் பாரத் திட்டத்திற்கு மக்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கொரோனா பரவலால் சரிவடைந்த பொருளாதாரத்தை சரி செய்து வருகிறோம்.

ஏர் இந்தியாவை விற்கும் நடவடிக்கை முழுமையாக நிறைவடைந்துவிட்டது.

அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிப்பு.

நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

போக்குவரத்து கட்டமைப்பு துறையின் மேம்பாட்டிற்காக ரூ.20,000 கோடியில் புதிய திட்டம்.

நிதி சார்ந்த தொழில்நுட்பத்தை ஊக்குவிப்பதில் டிஜிட்டல் பொருளாதாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நாடு முழுவதும் 4 இடங்களில் சரக்கக பூங்காக்கள் அமைக்கப்படும்; அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.

🔴🔴

கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதி கிடைத்தவுடன் நதிகள் இணைப்பு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும்

[டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நாடு முழுவதும் உருவாக்கப்படும்

தொலைக்காட்சிகள் மூலமாக கல்வி முறையை செயல்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக 200 சேனல்கள் உருவாக்கப்படும்

ஒரு வகுப்பு ஒரு தொலைக்காட்சி என்ற திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படுகின்றது

விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் விவசாயத் துறையில் டிரோன்கள் பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படும்

இதன் மூலம் விவசாய நிலங்களை அளவிடுவது உரங்களை தெறிப்பது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது

சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துதல் தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது

தடுப்பூசி செலுத்தும் திட்டம் மிக விரைவாக செயல்படுத்தப்பட்டது பொருளாதார மீட்சிக்கும் பெரிய அளவில் உதவியது

சிறு குறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2 லட்சம் கோடி கடன் வழங்க நடவடிக்கை

சிறு, குறு நிறுவனங்களுக்கான அவசரகால கடன் உதவி உத்தரவாத திட்டம் 2023 மார்ச் வரை நீட்டிப்பு

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 48,000 கோடி ரூபாய் வரும் நிதியாண்டில் ஒதுக்கப்பட்டு வீடுகள் கட்டப்படவுள்ளன

தொலைத்தொடர்பு மருத்துவ சேவை வசதி மேம்படுத்தப்படும்;

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்விற்கான திட்டங்கள் தற்போதைய சூழலுக்கு ஏற்றார்போல் மாற்றி அமைக்கப்படும்

கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும்

ஏர் இந்தியா நிறுவனத்தின் விற்பனை வெற்றிகரமாக முடிந்தது. இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல் ஐ சி -யில் பங்குகள் விற்பனை விரைவில் தொடங்கும்

3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு

பள்ளிகளில் கல்வி கற்பித்தலை மேம்படுத்த உயர்தர மின்னணு வழி கல்வி முறை அறிமுகம்

பிரதமரின் இ-வித்யா மூலம் அதிக மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்;
மகளிர் மேம்பாட்டிற்காக 3 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்

நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சலகங்கள் CBS (core banking solution) கீழ் கொண்டுவரப்ட்டுள்ளது.

குழந்தைகள் கல்வி மேம்பாடடைய சக்க்ஷன் அங்கன்வாடிகள் மூலம் ஒலி-ஒளி அமைப்பில் கற்றல் மேம்பாடடைய நடவடிக்கை எடுக்கப்படும்.

கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு PM E-Vidhya திட்டம் வழியாக 200டி.வி சேனல்கள் மூலம் மாநில மொழிகளிலேயே பாடங்கள் நடத்தப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு ரூ1,500 கோடி திட்டங்கள்

இ.பாஸ்போர்ட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதில் உள்ள சிப். வைக்கப்பட்டிருக்கும். இது சர்வதேச பயணங்களை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்படும்

*- நிதியமைச்சர் நிர்மலா

Related posts

சட்டப்பேரவை கேள்வி நேரம் – நேரடி ஒளிபரப்பு!

Editor

குறுகிய தூர ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம் உயர்வு, – ரயில்வே விளக்கம்

Editor

பப்ஜி மதனுக்கு சொகுசு வசதி – புழல் சிறை ஜெயிலர் சஸ்பென்ட்.!

Editor

Leave a Comment