Tuti Post
ஆரோக்கியம் சுற்றுசூழல் செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

கொரோனா விதிமீறல் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முக கவசம் அணியாத 561 பேருக்கு அபராதம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறி பொது இடங்களில் கொரோனா பரவும் வகையில் முக கவசம் அணியாத 561 பேருக்கு அபராதம் ரூபாய் 1,12,200/-ம்,

சமூக இடைவெளியை கடைபிடிக்காத ஒருவருக்கு அபராதம் ரூபாய் 500/-ம் என மொத்தம் ரூபாய் 1,12,700/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

தற்போது ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொது இடங்களில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு தலா ரூபாய் 200/- அபராதமும், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு தலா 500/- அபராதமும் விதிக்கப்படுகிறது.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பொது இடங்களில் முககவசம் அணியாத தூத்துக்குடி நகர உட்கோட்டத்தில் 172 பேர் மீதும், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் 76 பேர் மீதும்,

திருச்செந்தூர் உட்கோட்டத்தில் 41 பேர் மீதும், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் 38 பேர் மீதும், மணியாச்சி உட்கோட்டத்தில் 37 பேர் மீதும், கோவில்பட்டி உட்கோட்டத்தில் 136 பேர் மீதும், விளாத்திகுளம் உட்கோட்டத்தில் 31 பேர் மீதும்,

சாத்தான்குளம் உட்கோட்டத்தில் 30 பேர் மீதும் என மொத்தம் 561 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 1,12,200/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (26.01.2022) சாத்தான்குளம் உட்கோட்டத்தில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூபாய் 500/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காதவர்களுக்கு மொத்தம் ரூபாய். 1,12,700/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் கொரோனா பரவலை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள் மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி நம்மையும் காப்பாற்றி,

நம்மால் பிறருக்கு தொற்று பரவாமல் பிறரையும் காப்பாற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

விளாத்திகுளத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி – காணொளி காட்சி மூலமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்- அமைச்சர்கள் பங்கேற்பு.!

Editor

கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தக் கூடாது – தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு.!*

Editor

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – பள்ளிகளை மூடக் கோரி ஆசிரியர்கள் கோரிக்கை

Editor

Leave a Comment