Tuti Post
சினிமா செய்திகள்

ஜெய் பீம் மாபெரும் சாதனை – ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம் பிடித்து அசத்தல்.!

சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் ஆஸ்கர் யூடியூப் பக்கத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்வில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ஜெய் பீம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் பிரச்னைகளை உண்மைக்கு நெருக்கமாக பேசியிருப்பதாக இந்தப் படத்துக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் ஜெய் பீம் திரைப்படத்தின் காட்சிகளை படத்தின் இயக்குநர் ஞானவேல் விளக்கும் விடியோ ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் பதிவேற்றப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையை ஜெய் பீம் திரைப்படம் பெற்றுள்ளது.

Related posts

பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க உதவி எண்கள் ஒட்டப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Editor

பங்குச் சந்தையை வழிநடத்திய இமயமலை சாமியார் : ரகசியங்களை பகிர்ந்துகொண்ட முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா – அடிப்படை கட்டுமானத்தையே உலுக்கும் செயல் இது” என செபி அதிர்ச்சி.!

Editor

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

Editor

Leave a Comment