புலிகளின் தோல்விக்கான காரணங்களும் ஈழவிடுதலையின் வீழ்ச்சியும்
1.வி.பி.சிங் வீட்டில் திமுக அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்து ஈழம் ஒன்றே அந்த மக்களுக்கான தீர்வு அதை இந்தியா பங்களாதேஷ் போல் பெற்றுத்தர வேண்டும் எனவே வெளியுறவு கொள்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்கும்போதே தமிழ்நாட்டில் கோடம்பாக்கத்தில் வைத்து பத்பநாபன் உட்பட பலரை புலிகள் கொலை செய்தது.
இந்த சம்பவம் இந்திய அளவில் பேச்சுப்பொருளாக மாறியது அத்தோடு இந்த கோரிக்கை இந்திய அளவில் நீர்த்துப்போனது.ராஜிவ் வி.பி.சிங்கிற்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுகிறார். காங்கிரஸ் ஆதரவுடன் சந்திரசேகர் பிரதமர் ஆகிறார்.புலிகள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக கூறி திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.
2.மக்களின் அனுதாப அலை திமுக மீதும் மத்தியில் வி.பி.சிங் மீதும் வீச மீண்டும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஈழ கோரிக்கையை முன்னெடுக்க நல் வாய்ப்பு இருந்தது. மீண்டும் புலிகள் தங்கள் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொண்ட சம்பவம் ராஜிவ் படுகொலை. இது மக்களின் அனுதாப அலையை அப்படியே மத்தியில் காங்கிரஸ் மீதும் தமிழகத்தில் அது திமுக வெறுப்பாகவும் மாறியது.சொல்லி மாளாத வன்முறை திமுக மீது நிகழ்த்தியது அன்றைய அதிமுக காங்கிரஸ் கூட்டணி ஆளுநர் உதவியோடு.
விளைவு மத்தியில் மாநிலத்தில் இரண்டிலுமே ஈழத்திற்கு எதிரான ஆட்சி.புலிகள் அமைப்பு மீது தடை. புலிகளின் போக்கு தவறான பாதையில் செல்வதை உணர்ந்த கலைஞர் தன் நேரடி ஆதரவை தவிர்த்தார் ஆனால் ஈழ மக்களின் ஒற்றை பிரிதிநிதிதுவமாக மாறிப்போன புலிகளை ஆதரிப்பதில் தன் கட்சிக்காரர்களை அவர் தடுக்கவில்லை, அதுதான் இன்று திமுக துரோக பட்டம் சுமப்பதற்கு காரணமாக போய்விட்டது.
அதிமுகவை போல் கலைஞரும் தன் கட்சிக்காரர்களை புலிகளுக்கு ஆதரவு தராமல் தடுத்திருந்தால் அந்த துரோகப்பட்டம் வந்திருக்காது. கடைசிவரை புலிகளை எதிர்த்த ஜெயா ஈழத்தாய் ஆகிவிட்டார் கலைஞர் துரோகி ஆகிவிட்டார்.
- இந்தியாவின் Federal govt கோரிக்கையை எதிர்த்தது.பூலோக அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் இரண்டு நாடு உருவாவதை உலக நாடுகள் விரும்பவில்லை எனவே இந்தியா இலங்கைக்குள் Federal powerஐ எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியது. அதனை புலிகள் நிராகரித்தனர். அதனை ஆதரித்த சகோதர இயக்கங்களை போட்டுத்தள்ளினர். எந்த அரசியல் தெளிவு உள்ள தலைவனும் அன்று இதை ஆதரித்திருப்பார்கள்.தொடர்ந்து ஆயுதத்தை வைத்து ஒரு நாட்டுடன் போர் புரிய முடியாது ஒரு கட்டத்தில் சமாதான உடன்படிக்கை மூலம் வென்றெடுக்க வேண்டும் என்ற அரசியல் தெளிவு இல்லாதவர்களாக இருந்தார்கள் புலிகள்.
4.ஜெயவர்தனே படுகொலை அதை தொடர்ந்து சர்வதேச அளவில் பயங்கரவாத இயக்கமாக பல நாடுகளில் தடையை பெற்று உலக நாடுகளின் ஆதரவை இழந்தது.
5.உள்முரண்களை தீர்க்க தவறி முஸ்லிம் மக்களை ஒரே இரவில் யாழ்ப்பாணத்தை விட்டு விரட்டியதுடன், பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த 150க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லீம்களை கொடுரமாக கொன்று குவித்தது. இதுப்போன்ற பல சம்பவங்கள் புலிகள் தடையை சர்வதேச அளவில் உயிர்ப்புடன் வைத்திருக்க சிங்கள பேரினவாதத்திற்கு உதவியது.
6.Sep 11ற்கு பிறகு உலக நாடுகள் கொரில்லா போராளிகளை அழிக்க முடிவு எடுத்துவிட்டது மேலும் இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த மற்றொரு பூகோள அரசியலும் அதில் அடக்கம். ஆனாலும் வேறு எந்த அமைப்புக்கும் அமையாத ஒரு நல் வாய்ப்பு புலிகளுக்கு அமைந்தது அதுதான் Oshlo ஒப்பந்தம் அதாவது மீண்டும் முழு அதிகாரம் கொண்ட Federal powerஐ இலங்கைக்குள்ளையே வழங்க உலக நாடுகள் கோரிக்கை வைத்தது. இதுத்தான் நல் வாய்ப்பு என்று உணர்ந்த ஆண்டன் பாலசிங்கம் அதை ஆதரித்தார் காரணம் அவர் எதிர்க்காலத்தை உணர்ந்த தேர்ந்த அரசியல்வாதி.
இனியும் ஆயுதப்போர் பலனளிக்காது என்று உணர்ந்தவர். முழு பலம் இருக்கும்போதே ஈழத்தை Federal powerஆக வாங்குவதே அரசியல் சாதுர்யம் என்ற தெளிவு பெற்றிருந்தார். இந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டால் இனி கனவிலும் ஈழம் சாத்தியமாகாது மொத்தமாக கொன்றொழித்து விடுவார்கள் என்று ஆண்டன் உணர்ந்திருந்தார். ஆனால் இதை உணராத பிரபாகரன் அதை நிராகரித்தார். போர் காதலனான அவர் ஈழம் தனிநாடு என்ற கொள்கையில் தீர்க்கமாக இருந்தார்.
இது கொள்கைப்பிடிப்பு என்று சிலர் பாராட்டினாலும் ஆண்டன் முடிவே அறிவுக்கு ஒப்பானாது என்று சான்றோர்கள் அறிவர் காரணம் ஒரு 10000 பேர் கொண்ட இயக்கம் ஒரு நாட்டுடன் தொடர்ந்து போர் செய்ய இயலாது.முப்பது வருட போர் வாழ்க்கை மக்களை சோர்வடைய வைத்துவிட்டது. உலக அரசியல் சூழ்நிலை புலிகளுக்கு ஆதரவாக இல்லை.அண்டை நாடுகளான இந்தியாவின் வெளியுறவு கொள்கையும் அப்படியே அமைந்தது.எனவே இப்போது இருக்கும் ஆயுத பலத்தை வைத்து சமாதான Federal powerஐ வாங்குவதுதான் நுட்பமானது என்று ஆண்டன் உணர்ந்திருந்தார்.
அதை பிரபாகரனிடம் எவ்வளவு எடுத்துக்கூறியும் விளங்க வைக்க முடியவில்லை அவரால்.2009 முடிவை இந்த நிராகரிப்பின் மூலம் அன்றே உணர்ந்து பல பேட்டிகளை அளித்திருந்தார் ஆண்டன் பாலசிங்கம்.”தம்பிக்கு ஒரு எளவும் விளங்கவில்லை நான் என்ன செய்ய என்று ” நேரடியாகவே பேசினார்.
- இலங்கை நாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு.ராஜபக்க்ஷே புலிகளை அழிப்பேன் என்றும் ரணில் போர் இல்லாத அமைதி சூழ்நிலை ஏற்படுத்துவேன் என்றும் தேர்தலை சந்தித்தனர்.பிரபாகரன் தமிழ் மக்களை தேர்தலை புறக்கணிக்குமாறும் போர் வேண்டுமா வேண்டாமா என்று சிங்களவன் முடிவு செய்துக்கொள்ளட்டும் என்றும் அறிக்கை விட்டார். வெறும் 2% வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ஆட்சிக்கு வருகிறார். ஆட்சிக்கு வந்தவுடன் மஹிந்தா உலக நாடுகள் எல்லாம் சென்று ஆதரவு கூறுகிறார். உலக நாடுகள் இசைய சீனாவின் ஆதரவோடு போர் ஆரம்பமாகிறது.
8.கிழக்கு மக்களின் பிரதிநிதித்துவம் நிராகரித்தல். போரில் பெரும் பின்னடைவுக்கு காரணம் கிழக்கு புலிகள் கடைசி நேரத்தில் ஆயுதத்தை மவுனித்தது.அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இயக்கத்தில் கிழக்கு மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் மற்றும் மரியாதை மற்றும் யாழ் மேட்டுக்குடி தளபதிகளின் ஆதிக்கம்.அவர்களின் கோரிக்கை கடைசிவரை பிரபாகரனின் காதுக்கு எடுத்துச்செல்லப்படவில்லை, அல்லது தவறாக எடுத்துச்செல்லப்பட்டது அல்லது தெரிந்தும் கண்டுக்கொள்ளவில்லை காரணம் எது ஆயினும் 4000 கிழக்கு புலிகள் ஆயுதம் மவுனித்தது இராணுவ ரீதியாக பெரும் பின்னடைவு.
9.சமாதான காலத்தில் இயக்கத்தினர் திருமணம் பிள்ளை குட்டிகள் என்று வாழ்க்கை மாறிவிட்டதால் போருக்கு பெரும்பாலோனோர் செல்லவில்லை.மேலும் கட்டாய ஆட்சேர்ப்பு மற்றும் போதிய பயிற்சியின்மை கடைசிக்கட்டத்தில் பெரும் இராணுவ பின்னடைவு ஏற்ப்படுத்திவிட்டது.
10.இறுதிப்போரில் இராணுவம் அட்டைப்பெட்டிப்போல் புலிகளை வளைத்துவிட்டது இனி எதுவுமே செய்ய முடியாத கள நிலவரம் புலிகள் மக்களை கேடயமாக வைத்திருந்தது. உலக நாடுகள் ஒரு நல் வாய்ப்பாக போரை தற்காலிகமாக நிறுத்தி கேடையமாக பிடித்து வைத்திருக்கும் மக்களை விடுவிக்குமாறும் புலிகளையும் காப்பாற்றுவதாகவும் ஒரு பரிசீலனையை முன் வைத்தனர்.16 பக்க அறிக்கையோடு விடுதலை புலிகளின் வெளிநாட்டு பொறுப்பாளர் KMPமூலம் புலிகளின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை “இல்லை ஏற்க முடியாது” என்று மூன்றே வார்த்தைகளில் நிராகரித்தார் பிரபாகரன்.கேடயமாக பிடித்து வைத்திருந்த மக்களையும் விடுவிக்க மறுத்துவிட்டார் அவர். மக்களை கேடையமாக வைத்திருந்தால் உலக நாடுகள் காப்பாற்றும் என்று எண்ணியிருந்தாரா இல்லை அவர்களை கேடையமாக வைத்து கப்பலில் தப்பித்துவிடலாம் என்று நினைத்திருந்தாரா அவருக்கே வெளிச்சம்.ஆனால் போரின் இறுதிக்கட்டத்துக்கு வந்திருந்த சிங்கள அரசு போரை நிறுத்தவும் தயாராக இல்லை புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்கவும் தயாராக இல்லை மொத்தமாக ஒழித்துவிடத்தான் எண்ணியிருந்தது மக்களோடு சேர்த்து. காரணம் Strategy என்ற பெயரில் புலிகள் மக்களை கேடையமாகவும் சீறுடை தவிர்த்து மக்களோடு மக்களாக சேர்ந்து தீடீர் தாக்குதலிலும் ஈடுப்பட்டது.இதை களத்தில் இருந்த Human watch, Amnesty,Redcross,UN அனைவரும் பதிவு செய்திருந்தனர். இது சிங்கள இனவெறி அரசுக்கு பின்னாளில் தப்பிக்க லாவகமாகவும் மக்களோடு சேர்த்து புலிகளையும் அழித்து ஒழிக்க சாதகமாகவும் அமைந்துவிட்டது.ஆம் புலிகளை அழிக்கிறேன் என்ற பெயரில் கேடையமாக இருந்த மக்களையும் அழித்து ஒழித்தது.
இந்த சங்கிலி தொடர் அரசியல் பிழைகள்தான் புலிகளும் மக்களும் அதோடு தேர்த்து ஈழவிடுதலையும் அழிய காரணம்.
முழுப்பொறுப்பும் புலியின் தலைமைக்குத்தான் மற்றப்படி தமிழ்நாட்டின் ஒரு கட்சியின் மீது பலி போடுவதெல்லாம் அயோக்கியத்தனம் புலிகளின் பின்பத்தை காக்க மேற்கொள்ளப்படும் அரசியல் நடவடிக்கை.
இந்திய அரசியலமைப்பின் கீழ் செயல்படும் ஒரு மாநில அரசு தன் அதிகாரத்துக்கு உட்பட்டு என்ன செய்ய முடியுமோ அதைத்தான் செய்தது.
- ஹராப்பன்
@haraappan