Tuti Post
அரசியல் ஆன்மிகம் கல்வி செய்திகள்

பள்ளிச் சிறுமிகளை சீரழித்த சிவசங்கர் பாபா டில்லியில் கைது.. சிபிசிஐடி அதிரடி

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

இதற்கிடையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையிலான தனிப்படையினர் டேராடூன் விரைந்தனர்.

ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட ஆஸ்பத்திரிக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது சிவசங்கர் பாபா எங்கு உள்ளார் என்பது குறித்து அப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் மற்றும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆசிரியர்களிடம் மற்றொரு தனிப்படை சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் டில்லியில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிவித்துள்ளனர். அவர் விமானம் மூலம் சென்னை அழைத்து செல்லப்படுவதற்கான வேலைகள் ஆரம்பித்துள்ளதாகவும் சிபிசிஐடி தெரிவி்த்துள்ளது..

Related posts

தூத்துக்குடி தூய மாியன்னைக் கல்லூாி சார்பில் பெண்களுக்கான சணல் பை மற்றும் தையல் பயிற்சி வகுப்புகள் துவக்கம்

Editor

வாக்கு சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புக்கான முன்னேற்பாடு – மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆய்வு

Editor

“யாரிடம் பணம் பெற்றுவிட்டு போட்டி என கேட்கிறார்கள்..! அதனால் விலகுகிறேன்” – தேர்தலில் இருந்து விலகினார் மன்சூர் அலிகான் –

Editor

Leave a Comment